Web Advertisement Contact

குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை; டுவிட்டரில் பதிவிட்டார் அமீர்கான்

Updated in 2020-Jun-30 02:45 AM

நடிகர் அமீர்கானின் வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமீர்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அமீர் கான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: என் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் என டெஸ்ட் முடிவு வந்துள்ளது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் உடனடியாக தனிமைப் படுத்தப்பட்டனர். பிஎம்சி அதிகாரிகள் மிகவும் துரிதமாக செயல்பட்டு அவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அவர்களை நன்றாக பராமரித்துக் கொள்ளும் BMCக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மேலும் மொத்த சொசைட்டியையும், இடத்தையும் கிருமிகள் இல்லாமல் ஸ்டெர்லைஸ் செய்ததற்கு நன்றி. என் குடும்பத்தினர் அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. தற்போது நான் என் அம்மாவை டெஸ்ட் எடுப்பதற்காக அழைத்துச் செல்கிறேன்.

அவர்தான் குடும்பத்தில் டெஸ்ட் எடுக்கப் போகும் கடைசி நபர். அவருக்கும் நெகட்டிவாக இருக்கவேண்டும் என பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு மிகவும் பரிவுடன் உதவி செய்த பிஎம்சி அதிகாரிகளுக்கு நான் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

மேலும் கோகிலாபென் ஹாஸ்பிடல், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.