Web Advertisement Contact

கணக்குப்புலி சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாற்று படம் 31ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியீடு

Updated in 2020-Jul-03 02:52 AM

கணக்குப்புலி என்று அழைக்கப்படும் சகுந்தலாதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்களை பெருக்கி அது எத்தனை இலக்கமானாலும் நிமிடத்தில் விடை கூறுவதில் இயந்திரத்தைவிட மின்னல் வேகத்தில் செயல்படும் திறன் கொண்டவர் சகுந்தலா தேவி. எண்களின் கனமூலத்தைச் சொல்வதில் பலமுறை கணினியைக் கூட தோற்கடித்துள்ளார். கணக்கு புலி, மனித கணிப்பொறி என்று சிறப்புப் பெயர் கொண்டு குறிப்பிடப்படும் சகுந்தலா தேவியின் பயோபிக் பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் புரொடக்ஷன் மற்றும் விக்ரம் மல்ஹோத்ராவால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை அனு மேனன் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 31 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பாலிவுட்டில் ஏற்கனவே குலாபு சித்தாபு , லக்ஷ்மி பாம் உள்ளிட்ட பல படங்கள் ஓடிடி வெளியீட்டில் இணைந்துள்ளது. மேலும் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக காத்திருக்கின்றன. கோலிவுட்டில் தான் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டும் ஓடிடி தளத்தை அணுகியிருக்கின்றன.

உச்ச நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று உறுதியுடன் இருக்கிறார்கள். உதாரணமாக விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு முதல் வெளியீடாக வெளிவர இருக்கிறது. ஆனால் பாலிவுட்டில் உச்ச நடிகரான அக்சய் குமார் நடித்துள்ள லக்ஷ்மி பாம், அமிதாப் பச்சன் நடித்துள்ள குலாபு சிதாபு உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் தயக்கமின்றி வெளியாகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.