வம்பு நடிகருக்கும், மூணுஷா நடிகைக்கும் திருமணமா?

Updated in 2020-Jul-21 08:49 AM

வம்பு நடிகரும், மூணுஷா நடிகையும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்று செய்தி காட்டுத்தீ போல் சமூக வலைதளங்களில் சூடு கிளப்பி வருகிறது.

வம்பு நடிகர் என்றாலே சின்ன காதல் மன்னர் என்று கோலிவுட் வட்டாரங்களில் சொல்வார்கள். அந்தளவிற்கு காதலும் இவரும் பின்னி பிணைந்து இருந்தனர். இரண்டு நடிகைகளுடன் காதல் ஏற்பட்டு பிரேக் அப் ஆனது.

பின்னர் இரண்டாவதாக காதல் செய்த நடிகையுடன் மீண்டும் காதல் என்று செய்திகள் உலா வந்தது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வம்பு நடிகருக்கும்- மூணுஷா நடிகைக்கும் திருமணம் என்ற செய்தி உலா வருகிறது. மூணுஷா நடிகையும் வம்பு நடிகருக்கு சளைத்தவர் இல்லை. தெலுங்கு நடிகருடன் காதல், பிரேக் அப், தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம் என்று பல்வேறு செய்திகளில் அடிப்பட்டவர்தான்.

இவர்கள் இணைந்து நடித்த படங்களில் இவர் க்யூட் ஜோடியாகதான் இருந்தனர். தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் இருவரின் திருமண செய்திகளுக்கு இருதரப்பும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.