Web Advertisement Contact

அடுத்தமாதம் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

Updated in 2020-Jul-25 10:34 AM

ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருப்பதால் அடுத்த மாதம் 2-வது வாரத்திலேயே தோனி தலைமையிலான சென்னை அணி அங்கு சென்று பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் தோனி. கடந்த 1 வருடமாக இந்திய அணியில் விளையாடாமல் உள்ள தோனி, ஐபிஎல் தொடரில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலககோப்பை பங்கற்கும் இந்திய அணியில் இடம் பிடிப்பார்.

இதனால் இந்த ஐபிஎல் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்கிறார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஸ்டார் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி முந்தைய எல்லா போட்டிகளையும் விட பெரியதாகும். போட்டி எங்கு நடக்கிறது. எந்த அணி வெற்றி பெறப்போகிறது. யார் அதிக ரன்கள் குவிக்கிறார். யார் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துகிறார் என்பது பெரிய விஷயமல்ல.

ஐக்கிய அரபு அமீரகம் எந்த வடிவிலான போட்டியையும் நடத்துவதற்கு சிறப்பானதொரு இடமாகும். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த ஐ.பி.எல். போட்டி தேசத்தின் மனநிலையை மாற்றப் போகிறது என்பது தான் மிகவும் முக்கியமானதாகும் என தெரிவித்துள்ளார்.