Web Advertisement Contact

கரூர் மாவட்டத்தில் விதைச்சான்று துறை நடவடிக்கைகளை அதிகாரி ஆய்வு

Updated in 2020-Jul-27 02:04 AM

விதைச்சான்று இயக்குனர் ஆய்வு... கரூர் மாவட்டத்தில், விதைச்சான்று துறையின் நடவடிக்கைகள் மற்றும் திட்டப்பணிகளை, கோவை விதைச்சான்று இயக்குனர் சுப்பையா ஆய்வு மேற்கொண்டார்.

இதில், செல்லாண்டிபாளையம், குப்புச்சிப்பாளையம் ஆகிய பண்ணைகளில் ஆய்வு செய்து, உற்பத்தியை பெருக்கிடவும், விளைபொருட்களை முறையாக விற்பனை செய்திடவும் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, பசுபதி பாளையத்திலுள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தில், பதிவேடுகள் மற்றும் விதை குவியல்களை பார்வையிட்டார்.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய காலத்தில் கிடைத்திட, நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கரூர், காந்திகிராமத்தில் இயங்கி வரும் விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டு, விதையின் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம் போன்ற பல்வேறு பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இனுங்கூர் அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில், கருவிகளின் செயல்பாடு, விதை சுத்திகரிப்பு பணி மற்றும் சான்று பணிகளை ஆய்வு செய்தார். விதைச்சான்று இணை இயக்குனர் கனகராஜன், கரூர் விதை ஆய்வு துணை இயக்குனர் மாயகிருஷ்ணன், விதை சான்று உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், விதை பரிசோதனை அலுவலர் லீமா ரோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.