Web Advertisement Contact

சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை நாளை முதல் தொடக்கம்

Updated in 2020-Jul-28 08:39 AM

சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது.

இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் முதல் விற்பனை ஜூலை 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் எம்ஐ வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்-ல் உள்ள சில சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
- 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங். இப்படி ஏராளமான சிறப்புகளை கொண்டு விற்பனை வருகிறது.