Web Advertisement Contact

இன்றைய ராசிப்பலன் - 31.07.2020

Updated in 2020-Jul-30 06:50 AM

31-07-2020, ஆடி 16, வெள்ளிக்கிழமை.

இராகு காலம் - பகல் 10.30-12.00

எம கண்டம்- மதியம் 03.00-04.30

குளிகன் காலை 07.30 -09.00.

 

மேஷம்

உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் நிதானமாக செயல்படுவதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் செய்யும் காரியங்களில் மற்றவர்கள் தலையீட்டால் தடைகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை கொடுக்கும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்கள் சில இடையூறுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் ஒருசில பாதிப்புகள் ஏற்படும். பேச்சில் பொறுமையாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

மிதுனம்

தொழில் தொடர்பான வம்பு, வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நினைத்தது நிறைவேறும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இன்று இருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டு.

கடகம்

திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகமுண்டு. நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும்.

சிம்மம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும்.

கன்னி

உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பிள்ளைகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் ஒருசில உபாதைகள் வந்து நீங்கும்.

துலாம்

உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூல பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நற்செய்திகள் கிடைக்கும்.

விருச்சிகம்

எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தெய்வதரிசனம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் ஒரு சில மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை பெறலாம்.

தனுசு

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டு.

மகரம்

குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி நிம்மதி உண்டாகும். வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணவரவு சீராகும் .சுப காரியங்கள் கை கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டு.

கும்பம்

தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலனை கொடுக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும்.

மீனம்

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் உண்டாகலாம். தொழிலில் ஓரளவு லாபம் கிடைக்கும். வெளி வேலைகலால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.