Web Advertisement Contact

ரஷ்யாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8.39 லட்சமாக அதிகரிப்பு

Updated in 2020-Jul-31 07:43 AM

கொரோனா பாதிப்பு... ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,482 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 8,39,981 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4 ஆவது நாடாக ரஷியா உள்ளது. முன்னதாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.  இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 5,482 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 8,39,981 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 161 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 13,963 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் தற்போது வரை 6,38,410 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.