கேரளாவில் இன்று புதிதாக 1310 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated in 2020-Jul-31 08:08 AM

மேலும் 1310 பேருக்கு கொரோனா... கேரளாவில் புதிதாக 1,310 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக 1,310 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,596 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 74 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் ஒரே நாளில் 864 பேர் உள்பட மொத்தம் 13,027 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 10,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,140 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாள்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இந்நிலையில் இன்று புதிதாக மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 9,217 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 7,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.