Web Advertisement Contact

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்

Updated in 2020-Aug-04 08:12 AM

விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி விவோ எஸ்7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

புதிய ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ எஸ்7 ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் புளூ, ஜாஸ் பிளாக் மற்றும் மூன்லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 2798 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 30150 என்றும், 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை 3098 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 33380 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

விவோ எஸ்7 சிறப்பம்சங்கள்:-
ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
டூயல் சிம்
64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.89
8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
2 எம்பி மோனோ கேமரா, f/2.4
44 எம்பி ஆட்டோபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/2.0
8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.28
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப்-சி
4000 எம்ஏஹெச் பேட்டரி
33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்