ஆளை விடுங்கப்பா சாமிங்களா; தப்பித்து ஓடும் விஜயமான பதி நடிகர்

Updated in 2020-Aug-08 08:02 AM

"சுமார் மூஞ்சி" பெயர் கொண்ட விஜயமான பதி நடிகர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துக் கொண்டு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தன்னுடைய நண்பர்களுக்கு உதவி செய்யும் விதமாக பல படங்களில் நடித்து கொடுத்தார். ஆனால் அதில் சில படங்கள் ஓடவில்லையாம்.

மீண்டும் அந்த இயக்குனர்கள் நடிகரிடம் கதை சொல்லி மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என்று தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன விஜயமான பதி நடிகர் இந்த கதை வெப் தொடராக எடுக்கலாம் என்று கூறி அவர்களை வேறு பாதைக்கு அனுப்பி விடுகிறாராம்.

இதனால் பல இயக்குனர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம். அதுசரி தொடர்ந்து வெற்றியை கொடுத்தாதானே கோலிவுட்டில் நிலைத்து நிற்க முடியும்.