Web Advertisement Contact

மேலும் 2 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு

Updated in 2020-Aug-09 08:23 AM

மேலும் 2 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா... அதிமுக எம்எல்ஏக்கள் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கம், தனக்கு அறிகுறிகள் இருந்ததால் கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு கொரோனா உறுதியானதால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன், தன்னுடன் இணைந்து கட்சி பணியாற்றியவருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், பரிசோதனை எடுத்துள்ளார்.

இதில் கொரோனா உறுதியானதால் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.