முருங்கைக்காய் பேமஸ் படத்தின் பார்ட்-2 வில் நடிக்க மறுத்த வரலாற்று நடிகை

Updated in 2020-Aug-16 08:15 AM

முருங்கைக்காய் பேமஸ் படத்தின் பார்ட்-2 வில் நடிக்க வரலாற்று பட நாயகி மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாராகி வருவது கோலிவுட்டில் தற்போதைய டிரெண்ட். அந்த வகையில் முருங்கைக்காய்க்கு பெயர் பெற்ற படம் 1983-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. இதில் கதாநாயகனாக நடித்து இயக்கியவர் பேமஸ் திரைக்கதை வசனகர்த்தா என்று பெயர் பெற்றவர்.

படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் 'ரீமேக்' செய்யப்பட்டது.  இப்போ இந்த படத்தின் பார்ட்- 2 படம் தயாராக போகிறது. இதில் கதாநாயகியாக நடிக்க வரலாற்று பட நாயகியை அணுகியதாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் புதிய படங்களை ஏற்கவில்லை என்று அவர் கூறியதாகவும் சொல்றாங்க.