Web Advertisement Contact

வாய்ப்பு கேட்டு பிரபல நடிகரை நச்சரிக்கும் முன்னணி நடிகை

Updated in 2020-Aug-29 08:21 AM

வாய்ப்பு கொடுங்கள்... ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் தெலுங்கு பிரபல நடிகரிடம் வாய்ப்பு கேட்டு நச்சரித்து வருகிறாராம்.

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் வாரிசு நடிகை அவர். தற்போது தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார். இவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க அங்கிருக்கும் தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்களாம்.

இதை தெரிந்துக் கொண்ட நடிகை தெலுங்கு பக்கம் கொஞ்ச நாள் ஒதுங்கி வாய்ப்புள்ள போதே தூற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார். இருப்பினும் அஸ்திவாரம் பலமாக இருந்தால்தானே கட்டிடமும் வலுவாக இருக்கும் என்று தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவரிடம் நேரடியாகவே உங்களுடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று வாய்ப்பு கேட்டு தொடர்ந்து நச்சரித்து வருகிறாராம். நடிகரும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆகி உள்ளார்.