விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு… நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

December 2, 2019 17 0 0

துப்பாக்கிச்சூடு… பிரேசிலில் விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாயினர்.

ஸா பாலோ பகுதில் இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகள் இருவரை போலீசார் பின்தொடர்ந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் நடைபெற்று கொண்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் நுழைந்த குற்றவாளிகள், கூட்டத்தில் இருந்தவாறு போலீசாரை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இதனால் விருந்தில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: அச்சம், கூட்ட நெரிசல், துப்பாக்கிச்சூடு Categories: world news
share TWEET SHARE
Related Posts