சீனாவுடன் இயல்பான வர்த்தகத்திற்கு இனி சாத்தியமே இல்லை… அமைச்சர் பிரான்சுவா தகவல்

December 2, 2019 17 0 0

இனிமேல் சாத்தியமே இல்லை… சீனாவுடனான இயல்பான வர்த்தகத் தொடர்புகள் இனிமேல் சாத்தியமில்லை என்கிறார் புதிய வெளிவிவகார அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின்.

சீனாவின் குவாவி நிறுவன அதிகாரி மெங் வான்ஷோ கனேடியப் பொலிஸாரால் வான்கூவர் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கக்கட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இவ்வாறான முடிவொன்றுக்கு கனடா வந்துள்ளது.

சீனா – கனடா இடையே மோசமான உறவுகள் நிலவி வருவதை தான் ஏற்றுக்கொள்வதகவும் கனடா வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
இதனை ஒரு பேட்டியில் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 டிசெம்பர் மாதம் வான்கூவரில் மெங் வான்ஷோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து சீனா ஆத்திரத்துடன் உள்ளது. இந்தக் கைதைத் தொடர்ந்து மே மாதத்தில் இரு கனடியர்களான மைக்கேல் கோவ்ரிக் மற்றும் மைக்கேல் ஸ்போவர் ஆகியோர் சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ளனர்.

மேலும் கனேடிய இறைச்சி மற்றும் கனோலா இறக்குமதியை கனடா தடை செய்தது குறிப்பிடத்தக்கது. சீனாவுடனான உறவு மோசமாக சீர்குலைந்துள்ளபோதும் சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் விடயத்தில் முழுமையான முன்னுரிமை அளிக்கப்படும் என புதிய வெளியுறவு அமைச்சர் கூறுகிறார்

சீனாவின் குவாவி 5-ஜி தொழிநுட்பம் கனடாவில் செயற்படுத்தப்படுவது குறித்து மீளாய்வு செய்யப்படும். இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்புக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சீனா – கனடா இடையிலான வர்த்தக மற்றும்; இராஜதந்திர உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

இரண்டு கனேடியர்களின் விடுதலையும் தனது முன்னுரிமையாக இருக்கும் என ஷாம்பெயின் வலியுறுத்துகிறார். அண்மையில் வெளியுறவு அமைச்சர்களின்; ஜி-20 உச்சி மாநாட்டில் சீன வெளிவிவகார அமைச்சருடன் இந்த பிரச்சினையை குறித்து அதிகம் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.

சீனா ஒரு பில்லியனுக்கும் அதிகமான நுகர்வோருடன் கனடாவின் முக்கியமான சந்தையாக இருக்கலாம். ஆனால் சீனா தொடர்ந்தும் நம்பகமாக கூட்டாளராக இருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே என பெய்ஜிங்கிற்கான முன்னாள் கனேடியத் தூதர் கை செயிண்ட்-ஜாக் கூறியுள்ளார்.

ஆசியாவின் பிற இடங்களில் கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் கனடாவின் சந்தையை வேறு நாடுகளுக்கு விரிவாக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். சீனாவின் சந்தையை நம்பியிருக்காமல் பரந்த சந்தைகளை நோக்கி நகர்வது முக்கியமானது என்று வெளியுறவு அமைச்சர் ஷாம்பெயின் கருதுகிறார்.

சீனாவுடனான வர்த்தக தகராறு காரணமாக கியூபெக்கில் பன்றி இறைச்சி உற்பத்தியாளர்கள் கிட்டத்தட்ட 120 மில்லியன் டெலர்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கனேடிய கனோலா கவுன்சில் கருத்துப்படி, கனேடிய கனோலா தயாரிப்புகளில் சுமார் 40 சதவீதம் பொதுவாக சீனாவில் விற்கப்படுகிறது. இது 2018 ஆம் ஆண்டில் 2.7 பில்லியன் டொலர் வருவாயைக் கொண்டுவந்தது. மெங் விடுவிக்கப்படும் வரை கனடாவுடனான வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகள் சாத்தியமில்லை என்பதில் சீனா உறுதியாக உள்ளது.

இந்நிலையில் மெங் வான்ஷோ வழக்கு ஜனவரி மாதம் வான்கூவர் நீதிமன்றில் மீண்டும் எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: சீனாவுடன், ஜனவரி மாதம் Categories: Canada
share TWEET SHARE
Related Posts