டில்லியில் வெங்காயம் கிலோ ரூ. 100க்கு விற்பனை

November 7, 2019 27 0 0

ஒரு கிலோ வெங்காயம் ரூ.100… நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் நூறு ரூபாயை எட்டியுள்ளது.

கனமழையால் வெங்காயத்தின் வரத்து குறைந்ததாலும், இடைத்தரகர்கள் மூலம் பதுக்கப்படுவதாலும் நாடு முழுவதும் அதன் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது என்று கூறப்படுகிறது.

பிற மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில், டெல்லியில் அதன் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. அங்குள்ள மிகப்பெரிய காய்கறி சந்தையான ஆசாத்பூர் மண்டியில் வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அதிகரிப்பு, வரத்து குறைவு, விலை, வெங்காயம் Categories: india news
share TWEET SHARE
Related Posts