வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் விபரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

November 8, 2019 21 0 0

ஆசிரியர்கள் விபரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு… பொதுமாறுதல் கலந்தாய்வு விதிகளை தளர்த்தக் கோரி வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுமாறுதல் கலந்தாய்வில் உள்ள விதிகளை தளர்த்தக் கோரி ஆசிரியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் வழக்குத் தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் விதிகளைத் தளர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளமான EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், ஒருசில ஆசிரியர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கல்வி அலுவலர்கள் மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், வழக்குத் தொடர்ந்த அனைத்து ஆசிரியர்களின் விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: ஆசிரியர்கள், இணையதளம், உத்தரவு, கல்வித்துறை Categories: india news
share TWEET SHARE
Related Posts