தனி அரசியல் சாசனம் உருவாக்க உத்தேச வரைபொன்று வெளியீடு

November 8, 2019 19 0 0

உத்தேச வரையறை… டொரண்டோவுக்கான தனி அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கான உத்தேச வரைபொன்று வெளியிடப்பட்டுள்ளது.

வீடமைப்பு, போக்குவரத்து, கல்வி போன்ற விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்ள, ஒண்டாரியோ அரசின் அனுமதிக்காக காத்திருக்காமல், டொரோண்டோ தனித்து இயங்கும் நோக்கில், இந்த சாசனம் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.

முன்னாள் டொரோண்டோ நகர முதல்வர்கள், முன்னாள் ஒண்டாரியோ மாகாண முதல்வர்கள் உள்ளடங்களானோர் இந்த யோசனைக்கு ஆதரவளித்துள்ளனர்.

Calgary, Edmonton, Winnipeg, Vancouver ஆகிய நகரங்கள், தமக்கென தனியான அரசியல் சாசனங்களை கொண்டுள்ளன. டொரொண்டோவுக்கான தனி சாசனத்தை கொண்டுவரும் முயற்சி வெற்றிபெற்றால், ஒண்டாரியோவில், தமக்கென தனியான அரசியல் சாசனத்தை கொண்ட முதல் நகரமாக டொரோண்டோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: டொரண்டோ, தனி அரசியல், முதல் நகரம் Categories: Canada
share TWEET SHARE