வெப் சீரிஸில் நடிக்கிறார் நடிகை சமந்தா!!!

December 2, 2019 11 0 0

வெப்சீரிஸ்-ல் நடிக்கிறார் நடிகை சமந்தா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் பல வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா, இந்த ஆண்டு மட்டும் விஜய் சேதுபதியின் ‘சூப்பர்டீலக்ஸ், மற்றும் ‘ஓ பேபி’ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

அவர் தற்போது தமிழில் சூப்பர் ஹிட்டான ’96’ படத்தின் தெலுங்கு மொழி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா ஒரு வெப்சீரிஸில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘தி ஃபேமிலி மேன்’ (‘The Family Man) என்ற டைட்டில் கொண்ட இந்த வெப்சீரிஸில் சமந்தா நடிக்க இருப்பதை வெப்சீரிஸ் குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

சமந்தாவும் தனது சமூக வலைத்தளத்தில் இந்த வெப்சீரிஸில் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உள்யிட்ட பலர் நடிக்கும் இந்த வெப்சீரிஸில் சமந்தா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

தென்னிந்திய திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரை உலகில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் தற்போது வெப்சீரிஸில் நடித்து வரும் நிலையில் சமந்தாவும் வெப்சீரிஸ் நடிக்கும் நட்சத்திரங்கள் பட்டியலில் தற்போது இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: சமந்தா, முன்னணி நட்சத்திரங்கள், வெப்சீரிஸ் Categories: Cinema
share TWEET SHARE