தலையில் கடுமையான துர்நாற்றமா? எளியமுறையில் தீர்வு பெற வழிகள்

November 30, 2019 24 0 0

பலருக்கு தலை முழுவதும் வியர்க்கும். இதனால் தலையில் கடுமையான துர்நாற்றம் வீசும். மேலும் தலையில் ஏற்கனவே பொடுகு இருக்கும் பட்சத்தில் மேலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றை இயற்கையான முறையில் தடுப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

சிலருக்கு தலையில் பக்கு, பக்கான பத்தையான கட்டிகள் ஏற்பட்டு துர்நாற்றம் அடிக்கும். இது எளிதில் ஒருவரிடமிருந்து அடுத்த வருக்கு பரவுகிறது. இதனால் தவிர்க்க முடியாத நிரந்தரமான சொட்டை தலையில் உண்டாகலாம்.

தலைக்கு குளித்து முடித்த பின்னர், முடியை நன்கு உலர வைத்து, எண்ணெய்யை தலைக்கு தடவ வேண்டும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரை குளிரவைத்து, பின் அந்நீரினால் தலைமுடியை அலச, தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.

தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்பில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து, பின் மைல்டு ஷாம்புவால் அலசவேண்டும். இதனால் ஸ்கால்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு. துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும். மூன்று பங்கு நீரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஈரமான முடியில் தடவி 5 நிமிடம் கழித்து நீரில் அலசலாம்.

Tags: அரைத்து, தக்காளி, துர்நாற்றம், பேஸ்ட் Categories: womens-tips
share TWEET SHARE
Related Posts