தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன் தொடக்கம்

December 2, 2019 7 0 0

கோலாகலமாக தொடங்கியது… தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தில் வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.

13வது தெற்காசியப் போட்டி நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், இந்தியா, இலங்கை, வங்கதேசம், பூடான், பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 700 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

தசரத் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற வண்ணமிகு விழாவில், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.

போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர். இந்திய அணிக்கு குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால்சிங் தலைமை வகித்து வந்தார்.

தொடக்க விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரங்கில் அமர்ந்திருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனைக் கண்டு ரசித்தனர்.

இப்போட்டியில் 319 தங்கப் பதக்கம் உள்ளிட்ட ஆயிரத்து 119 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இதுவரை நடைபெற்ற ஆசியப் போட்டிகள் அனைத்திலும் இந்தியாவே அதிகளவில் பதக்கங்களை வென்றுள்ளது.

Tags: அதிக பதக்கம், காட்மாண்டு, தங்கப்பதக்கம் Categories: india news
share TWEET SHARE
Related Posts