நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென்று ஒலித்த அலாரத்தால் பதற்றம்

November 7, 2019 25 0 0

பறந்த விமானத்தில் அலாரம் ஒலித்ததால் பதற்றம்… நெதர்லாந்தின் ஆம்ஸ்டர் டாமில் இருந்து ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகருக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் அலாரம் ஒலித்ததையடுத்து பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

விமானம் அருகில் இருந்த ஆம்ஸ்டர்டாம் நகர விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்ட பின்னர் ராணுவத்தினர் விமானத்திற்குள் நுழைந்து வெடிகுண்டு போன்ற ஆபத்தான பொருட்கள் இருக்கின்றனவா என சோதனையிட்டனர்.

பின்னர் இது குறித்து ஏர்-எத்தியோப்பியா விமான நிறுவன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் விமானி சந்தேகத்திற்குரிய பொருளை கண்டு வெடிகுண்டாக கருதி தவறுதலாக அலாரம் அடித்து பீதியைக் கிளப்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமானத்தில் எந்த வெடிப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: அலாரம் பயணிகள், பதற்றம், பறந்த விமானம் Categories: world news
share TWEET SHARE
Related Posts