வரும் 24ம் தேதி அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

November 7, 2019 25 0 0

வரும் 24ம் தேதி செயற்குழு கூட்டம்… அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும், அனைவரும் அழைப்பிதழ்களோடு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது,

Tags: அதிமுக, உறுப்பினர்கள், செயற்குழு கூட்டம், பொதுக்குழு Categories: india news
share TWEET SHARE
Related Posts