டிசோய் புயலால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

December 4, 2019 11 0 0

டிசோப் புயலில் சிக்கி 13 பேர் பலி… பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டிசோய் புயலால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டை டிசோய் என்ற சக்தி வாய்ந்த புயல் கடந்த திங்கட்கிழமை இரவு தாக்கியது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் புயல் காற்று கரையை கடந்த போது, கனமழையும் கொட்டித் தீர்த்தது.

இதனால் பல்வேறு நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் லட்சக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Tags: டிசோய், தாக்குதல், பலியானவர்கள், புயல் Categories: india news
share TWEET SHARE
Related Posts