வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணி தீவிரம்

December 2, 2019 7 0 0

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி… பிரெஞ்சு நாட்டின் தெற்கு பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணியில், தீயணைப்பு படை வீரர்கள் இறங்கியுள்ளனர்.

தொடர் கன மழையால் மேண்டலெயூ-லா-நெபூலே பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

இதுதொடர்பாக ஆயிரத்து 800-க்கும் மேலான புகார்கள் எழுந்ததை அடுத்து களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், இதுவரை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 52 பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags: தீயணைப்பு வீரர்கள், பத்திரமாக, புகார்கள், மீட்பு Categories: world news
share TWEET SHARE
Related Posts