ஸ்வீடன் நாட்டு மன்னர் வருகை… 5 நாள் சுற்றுப்பயணமாக ஸ்வீடன் நாட்டு மன்னர் 16ஆம் கார்ல் கஸ்டஃப் மற்றும் ராணி சில்வியா ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.
டெல்லி வந்த அவர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்கோவிந்த் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில், பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்தனர்.
இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மற்றும் வணிகம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு பேச்சுவார்த்தைகளும், ஒப்பந்தங்களும் இந்த இந்த சுற்றுப்பயணத்தில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மகாராஷ்ட்ரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட உள்ள ஸ்வீடன் மன்னர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.