300 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்

March 1, 2019 145 0 0

பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி (87) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பலருடன் நடித்த பெருமைக்குரிய நடிகை சீதாலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
தமிழ் திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வரும் ராதிகாவின் தாயார் சீதாலட்சுமி.

இவர் உடல் நலக்குறைவு காலமானார். கடந்த சில தினங்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பலருடன் நடித்த பெருமைக்குரியவர் நடிகை சீதா லட்சுமி. எங்கவீட்டு பிள்ளை, அன்னமிட்டகை, ஆண்டவன் கட்டளை உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாரின் சகோதரியாக நடித்தவர்தான் சீதாலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. பர்மாவில் பிறந்த சீதாலட்சுமி தமிழகத்தில் வளர்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு கொண்டவர். திரையுலகில் இவரது சாதனைகளுக்காக கலைமாமணி, கலைச்செல்வி என்கிற பல பட்டங்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கரங்களால் பெற்றவர். தந்தை பெரியார் விருது பெற்றவர்.

Tags: 300 படங்கள், சீதாலட்சுமி, விருதுகள் Categories: Tamil
share TWEET SHARE
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *