புதிய நீதிபதிகள் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

April 11, 2019 161 0 0

பரிந்துரை… பரிந்துரை… கொலீஜியம் புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.

ஐந்து உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை, நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

ராஜஸ்தான், கேரளா, மேகாலயா, ஆந்திரா, சட்டீஸ்கர் ஆகிய ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க மூத்த நீதிபதிகள் குழுவான கொலிஜியம், 5 நீதிபதிகளை பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய குழு இந்த பரிந்துரையை அளித்துள்ளது.

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்தர பட், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.ராமச்சந்திரன் மேனன், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.மிட்டல், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், மற்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா ஆகியோர்களை, கொலிஜீயம் பரிந்துரைத்துள்ளது.

Tags: உயர்நீதிமன்றம், நீதிபதிகள், பரிந்துரை Categories: Tamil
share TWEET SHARE
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *