பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலி

December 4, 2019 11 0 0

பனிச்சரிவில் சிக்கி பலி… ஜம்மு- காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

குப்வாரா மாவட்டத்திலுள்ள தங்க்தார் எனும் பனிப்பிரதேசத்தில், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 4 வீரர்கள், பனிச்சரிவில் சிக்கிய நிலையில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 3 வீரர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் தேதியும் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: 3 பேர், பனிச்சரிவு, பலி, ராணுவ வீரர்கள் Categories: india news
share TWEET SHARE
Related Posts