தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

November 8, 2019 23 0 0

2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தெற்கு மற்றும் உள்மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறினார்.

Tags: 2 நாட்கள், கனமழை, வளிமண்டலம், வாய்ப்பு Categories: india news
share TWEET SHARE
Related Posts