இரு வேறு இடங்களில் துப்பாக்கிச்சூட்டில் இரு குழந்தைகள் பலி

December 2, 2019 209 0 0

இரு குழந்தைகள் பலி… அமெரிக்காவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னாபொலிஸ் என்ற இடத்தில் பனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மர்ம நபர் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டான். இதில் இரு சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கியால் சுட்டவனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பிரெஞ்ச் குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபின் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தோரில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: 2 குழந்தைகள் பலி, துப்பாக்கிச்சூடு, போலீசார் Categories: world news
share TWEET SHARE
Related Posts