மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை கூட்டம்

November 7, 2019 32 0 0

விஜயகாந்த் ஆலோசனை… தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதிஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல், சாலைகள் சீரமைப்பு, டெங்கு தடுப்புப் பணிகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தேமுதிக அறிவித்துள்ளது. திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் எனவும் தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

Tags: ஆலோசனை, கூட்டம், தேமுதிக, நிர்வாகிகள், விஜயகாந்த் Categories: india news
share TWEET SHARE
Related Posts