அதிபர் டிரம்புக்கு எதிராக ஆபாச சைகை காட்டிய பெண் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி

November 6, 2019 24 0 1

கவுன்டி வாரிய கண்காணிப்பாளர் ஆனார்… அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக நடுவிரலை காட்டியதாக அரசு பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண், லவுடன் (Loudoun) கவுன்டி வாரியத்தின் கண்காணிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இரு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வரும் ஜூலி பிரிஸ்க்மேன் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு, சைக்கிள் ஓட்டியபடி சென்றபோது அந்த வழியாக காரில் சென்ற அதிபர் டிரம்புக்கு நடுவிரலை காட்டியதாக கூறப்படுகிறது.

இந்த ஆபாச செயல் தொடர்பான புகைப்படம் வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ஜூலி மார்க்கெட்டிங் துறை நிபுணர் என்ற அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் ஜனநாயக கட்சி அவருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது.

அதன்படி விர்ஜீனியா மாநிலத்தில் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் 52 சதவீதம் வாக்குகள் பெற்று லவுடன் கவுன்டி வாரியத்தின் கண்காணிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Tags: உள்ளாட்சி தேர்தல், கண்காணிப்பாளர், கவுன்டி வாரியம், போட்டி Categories: world news
share TWEET SHARE
Related Posts