எள் விதைப்பில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ள விவசாயிகள்

Updated in 2021-Feb-14 10:01 AM

எள்விதைப்பில் ஆர்வம்... ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விளைச்சலுக்கு வந்த நெல்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், வயல்களில் நிலவும் ஈரப்பதத்தை பயன்படுத்தி, விவசாயிகள் எள் விதைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம், புல்லமடை, செங்குடி, வரவணி, சேத்திடல், சீனாங்குடி, வண்டல், அளவிடங்கான் உள்ளிட்ட பகுதிகளில் எள் விதைப்பு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

எள் சாகுபடியை பொறுத்தவரை, கோடையில், அதிக தண்ணீர் தேவை இன்றி, லேசான ஈரப்பதத்திலும் வறட்சியிலும் மகசூல் கொடுக்கும் தன்மை கொண்டதால், இதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.