பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் நாளைக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

Updated in 2021-Mar-30 01:51 AM

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் விவசாயிகள் நாளை மார்ச் 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இது விவசாயிகளின் நிதி நிலையை பெரிதும் மேம்படுத்த உதவுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு விவசாயிகளுக்கு தலா ரூ .2,000 பணத்தை மூன்று தவணைகளில் அவர்களின் வங்கி கணக்குகள் செலுத்துகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது.

முதல் தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை, இரண்டாவது ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை மாற்றப்படுகிறது, மூன்றாவது ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள், மார்ச் 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

மார்ச் 31-ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்து அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அவர்களுக்கு ரூ. 2,000 தவணை பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த விவசாய நிலம், வருமான வரி செலுத்தாத மற்றும் ஆண்டு வருமானம் ரூ .10,000 க்கு குறைவாக உள்ள விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுடையவர்கள்.

இந்த திட்டத்தின் பலன்களை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு முறை விண்ணப்பித்திருந்தால், அதற்காக மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஒருவேளை தவறான பதிவு மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் இருந்தால் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படாது. பிரதமர் கிசான் சம்மனா நிதி திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in என்ற பக்கத்தில் நீங்கள் உள்நுழைய வேண்டும்.

அதில் (Farmers Corner) என்பதை கிளிக் செய்க. நீங்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், ஆதார் சரியாக பதிவேற்றப்படவில்லை அல்லது சில காரணங்களால் நீங்கள் ஆதார் எண்ணை தவறாக பதிவிட்டீர்கள் என்றால், உங்கள் தகவல்களை இங்கே திருத்தலாம். இதுவரை நீங்கள் உங்கள் பெயர் பதிவு செய்யவில்லை என்றால், இதில் பதிவு செய்யலாம்..