சிறுநீரகத்தை சுத்தம் செய்ய எளிய வழிமுறை உங்களுக்காக!!!

Updated in 2021-Apr-09 03:08 AM

சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்... நம் அன்றாட வழி உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக சிறுநீரகப் பிரச்சனை என்பது பெரும்பாலானோருக்கு உள்ளது.

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய சில எளிய டிப்ஸ் உங்களுக்காக... கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகள், அரை ஸ்பூன் சீரகம், அரை டம்ளர் எலுமிச்சை பழம் சாறு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அடுப்பில் வைக்கவும். அது பாதியளவு சுண்டும் வரை கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகம் சுத்தமாகும். இதனை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.