உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஆவாரம்பூ சூப் செய்முறை

Updated in 2021-Apr-11 09:50 AM

ஆவாரம் பூப்பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது. இதைத் தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.

தேவையானவை: ஆவாரம்பூ - 1 கப் (அ) உலர்ந்த பொடி - 2 டீஸ்பூன் தண்ணீர் - 250 மி. லி கேரட் - 1 பீன்ஸ் - 5 தக்காளி - 1 வெங்காயம் - சிறிது இஞ்சி - சிறிது பூண்டு - 2 பல் கொத்தமல்லி, புதினா - சிறிது மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக் கலக்கவும். பிற காய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும்போது மசித்து அடுப்பை நிறுத்திச் சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.