உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நெய், வெல்லம் கலவை

Updated in 2021-Apr-11 09:50 AM

நெய், வெல்லம் கலந்து கலவை உங்களின் ஆரோக்கியத்தை உயர்த்தும்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

அதன்படி வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவைதான் இந்த அற்புத உணவு. இதை உணவுக்குப் பின் சாப்பிடலாம். இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த உணவு கலவையைச் சாப்பிடுவதன் மூலம், பற்களைப் பாதுகாக்கலாம்.

ஹார்மோன்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கு. ஆயுர்வேதத்தின்படி, வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது உடலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இது தவிர, தோல், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இது உதவுகிறது. இந்தக் கலவையைத் தொடர்ந்து உண்டு வந்தால். அது நமது உடலில் மன அழுத்தத்தைக் குறைக்கும், இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை சிக்கல்களைச் சமாளிக்கவும் உதவுகிறது. இந்த உணவு கலவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.