மளிகை பொருட்களை வீட்டு கொண்டு வந்து டெலிவரி செய்யும் ரோபோ

Updated in 2021-Apr-12 07:05 AM

மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் ரோபோ... சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து மளிகை பொருட்களை வீட்டிற்கு கொண்டுவந்து வழங்கும் டெலிவரி ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது டெலிவரிக்கென தனியாக ஒரு தொகையை சூப்பர் மார்க்கெட்கள் வசூலிக்கின்றன. இதற்காக கேமல்லோ என்ற ரோபோவை OTSAW என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சோதனை முயற்சியாக சுமார் 700 வீடுகளுக்கு கேமல்லோ மளிகை பொருட்களை டெலிவரி செய்கிறது. கேமரா, 3D சென்சார்கள் உள்ளிட்டவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, அதிகபட்சமாக 20 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனுடையது.