ப்ரூக்ஃபீல்ட் உயிரியல் பூங்காவில் நான்கு ஹம்போல்ட் வகை பென்குயின் குஞ்சுகள் பிறந்தன

Updated in 2021-Apr-13 12:35 PM

4 பென்குயின்கள் சேர்ந்தன...அமெரிக்காவின் இல்லிநாய்ஸ் பகுதியில் உள்ள ப்ரூக்ஃபீல்ட் உயிரியல் பூங்காவில் புதிதாக 4 ஹம்போல்ட் வகை பென்குயின்கள் சேர்ந்துள்ளன.

கடந்த மார்ச் 13, 16, 24 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து நான்கு ஹம்போல்ட் வகை பென்குயின் குஞ்சுகள் பிறந்துள்ளன.

இத்துடன் சேர்ந்து மொத்தம் 34 ஹம்போல்ட் வகை பென்குயின்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக பிறந்த பென்குயின் குஞ்சுகளுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

பொதுவாக ஹம்போல்ட் வகை பென்குயின்கள் தனது குஞ்சுகளை 70 முதல் 90 நாள்கள் வரை பராமரிக்கும். அதன்பின்னர் தாய் பென்குயின் கடலுக்குச் சென்றுவிடும்.