ரஷியாவில் புதிதாக 8,320 பேருக்கு கொரோனா

Updated in 2021-Apr-13 12:36 PM

புதிதாக 8,320 பேருக்கு கொரோனா... ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 277 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிதாக 8,320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 8,702 ஆக இருந்தது. இதையடுத்து மொத்த பாதிப்பு 46,49,710 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,833 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

ரஷியாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 277 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 1,03,263 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கரோனாவுக்கு 377 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாதிப்பு குறைவாக இருந்தாலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

எனினும் ரஷியாவில் இதுவரை 42,72,165 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 2,74,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.