மாரி செல்வராஜின் அடுத்த படம் வாழ்க்கை வரலாற்று கதை

Updated in 2021-Apr-13 12:45 PM

இயக்குநர் மாரி செல்வராஜின் 3-வது படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பரியேறும் பெருமாள் படத்திற்கு பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ் நடிப்பில் இயக்கிய கர்ணன் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது,

இந்நிலையில் தனது மூன்றாவது படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை இயக்குகிறார் மாரி செல்வராஜ். கபடி வீரரின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அடுத்த படத்துக்கான திரைக்கதைப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பதால் சற்று சுலபமாக உள்ளது. தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் துருவ் விக்ரம். அது முடிந்த பிறகு என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.

பா. இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம், மாரி செல்வராஜின் அடுத்த படத்தைத் தயாரிக்கிறது. கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார்.