தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி

Updated in 2021-Apr-14 03:15 AM

தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்... உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பணியாற்றவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து முதல்வர் யோகி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 1,84,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1000ஐ தாண்டியுள்ளது.

பல மாநிலங்களிலும் தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக தான் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், அனைத்து பணிகளையும் ஆன்லைன் மூலம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.