உணவகங்களுக்கு யோர்க் பிராந்திய பொதுச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை 

Updated in 2021-Apr-14 08:17 AM

உணவகங்களுக்கு எச்சரிக்கை...யோர்க் பிராந்திய பொதுச் சுகாதார அதிகாரிகள் ஒரு வாகன் உணவகத்தில் இருந்து குறிப்பாக விரிவான கோவிட் -19 தொற்றுக்கள் குறித்து உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மார்ச் மாத இறுதியில், ஏப்ரல் தொடக்கத்தில் உணவகத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் தொடர்பு கொண்ட பின்னர், ‘அவென்யூ சிபி இ வினி’யின் 105 பங்கேற்பாளர்கள் வரை அதிக ஆபத்துள்ள தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 13, செவ்வாயன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை உணவகத்தில் உணவருந்தியவர்கள் 14 நாட்கள் சுயமாகத் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 1 ஆம் திகதி உணவகம் மூடப்பட்டது. ஆனால் முழுமையற்ற தொடர்புத் தகவல் காரணமாக அதிக ஆபத்துள்ள தொடர்புகளை அடைவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவிட் -19 தொடர்ந்து சமூகத்தில் பரவி வருவதால், சமூகத்தில் அத்தியாவசிய பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும், அடிக்கடி கைகளைக் கழுவவும், உங்கள் வீட்டுக்கு வெளியே யாருடனும் இரண்டு மீட்டர் உடல் இடைவெளியைப் பராமரிக்க வேண்டும்.

பொது இடங்களில் முகமூடி அணியவும், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டில் இருக்கவும் பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு குடியிருப்பாளர்கள் நினைவூட்டப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.