வாடிக்கையாளர்களுக்கு பீட்சாக்களை விநியோகிக்கும் ரோபோக்கள்

Updated in 2021-Apr-14 09:55 AM

பீட்சாக்களை விநியோகிக்கும் ரோபோக்கள்... அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ரோபோ மூலம் பீசாக்கள்  வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள டோமினோஸ் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. R2 என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோவில் பீட்சாக்கள் தயார் செய்யப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

வாடிக்கையாளர்கள் அனுப்பும் விவரங்கள் அந்த ரோபோவில் பதிவு செய்யப்பட்டு அந்த இடத்திற்கு பீட்சாவுடன் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கு நிறுவனம் அனுப்பிய விவரக்குறிப்பை வாடிக்கையாளர் ரோபோவில் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு பீட்சாக்கள் வழங்கப்படும்.