நீண்ட இடைவெளிக்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் நவ்யா நாயர்

Updated in 2021-Apr-15 02:17 AM

நீண்ட இடைவெளிக்கு பின் ரீ என்ட்ரி... தமிழில் அழகிய தீயே, பாச கிளிகள், மாயக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்த நவ்யா நாயர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க இருக்கிறார்.

நவ்யா நாயர் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 2010-ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவ்யா நாயர் நடித்து கடைசியாக 2014-ல் திரிஷ்யா என்ற கன்னட படம் வெளியானது.  தற்போது நவ்யா நாயர் மீண்டும் நடிக்க உள்ளார். 

பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகும் மலையாள படமான திரிஷ்யம் 2-ம் பாகத்தின் ரீமேக்கில் ரவிச்சந்திரனுடன் இணைந்து நடிக்கிறார். திரிஷ்யம் 2 மலையாளப் படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.