சட்டத்துறை அமைச்சர் சண்முகத்துக்கு கொரோனா தொற்று

Updated in 2021-Apr-15 09:50 AM

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இன்று ஒரேநாளில் 7987 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 62ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,999 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி பலரும் திக்குமுக்காடி வரும் நிலையில் இதுவரை திரையுலக பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா அறிகுறி இருந்ததால், இன்று காலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஸ்வாப் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் நேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.