காலை உணவில் எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!!

Updated in 2021-May-13 08:46 AM

காலை உணவில் சிலவற்றினை தவிர்ப்பது நமது உடல் நலத்திற்கு நல்லதாகும். காலை ஜூஸ் அருந்துவது பலருக்கும் எளிதான ஒன்றாகும். அதனை தவிர்த்து, பழங்களை வெட்டி சில துண்டுகள் காலை உணவில் எடுத்துக்கொள்வது நார்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் இவை நன்கு கிடைக்கச்செய்யும்.

அசிடிடி பிரச்சினை, வயிற்றில் புண், போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் காலை உணவில் சமைக்காத தக்காளியினை தவிர்க்க வேண்டும். காலை உணவிற்கு முட்டை சிறந்த ஒன்றாகும். காலை உணவில் தயிர் சேர்த்து கொள்வது நல்லது. இதில் புரதம் நிறைந்துள்ளது. மேலும் இது ஜீரணத்திற்கு உதவும்.

காலையில் டீ, காபி குடிப்பதை தவிர்க்கலாம். அவற்றை காலை உணவிற்கு பின்பு எடுத்துக்கொள்ளலாம். சிறிதளவு பாதாம் போன்ற கொட்டை வகைகளை காலை உணவிற்கோ அல்லது 11 மணி உணவிற்கோ எடுத்துக் கொள்வது மிகவும் நல்லதாகும்.

அதிகம் சர்க்கரை கலந்த உணவினை எடுத்து கொள்ள கூடாது. காலை உணவில் பப்பாளி பழம் சேர்த்து கொள்வது நல்லதாகும். கேக் போன்ற உணவுகளை தவிர்த்து விட வேண்டும். காலையில் முழு தானிய உணவுகள் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும்.