காட்டுப்பன்றி இறைச்சி விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு

Updated in 2021-May-14 10:46 AM

வெலிகம பல்லா பகுதியில் உள்ள காட்டில் பன்றி ஒன்றை வேட்டையாடி விருந்து வைத்த ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பன்றி இறைச்சி விருந்தில் பங்கேற்ற மற்றயவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக வெலிகம சுயதனமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் அயலில் உள்ளவர்கள் சுயதனிமைப்படுத்தபட்டபோதிலும் கிராமத்தை சுற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் பன்றி இறைச்சி கொரோனாவின் மற்றொரு கொத்தணியாக மாறலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.